சவூதி அரேபியாவில் தண்டனைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அவரை அழைத்து வரும் திகதியை உறுதியாகக் தெரிவிக்க முடியாவிட்டாலும், நடவடிக்கைகள் முறையாகத் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
