அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் இணைய சேவை கோளாறுகள் காரணமாக விமானம் மற்றும் வங்கி உள்ளிட்ட முக்கியத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மைக்ரோசாப்ட் சேவைகள், விமானத் துறையின் தொலைத்தொடர்பு அமைப்பு மற்றும் முன்னணி வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
