ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்குச் சொந்தமான இரண்டு பழமையான துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்தத் துப்பாக்கிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலுள்ள தேசிய அருங்காட்சியகமான Rijksmuseum இல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
