எங்கள் உயிர் தெய்வங்களே
எமை ஆண்டு நிற்கும்; தெய்வங்களே
எம்மை காத்து அரன்களாக நின்று
எழுந்த பேர் ஒளியே
ஏந்தியகொள்கைக்காய்
தாங்கிய இலைச்சிய பாதையில் சென்றவரே
சந்ததிவாழ சரித்த புருசராய்
சாதனை செய்தவரே
சிந்தையில் ஈழக்கனவினை தாங்கி
போர்களம்சென்றவரே
அஞ்சிடா வீரம் கொண்டிட்ட நீங்கள்
அரசுக்கு சொற்பனேமே -உம்மை
மிஞ்சிட வீரம் உலகினில் இல்லை
மில்லர்தான் முன்தளமே
ஈழப்பரம்பரை வீரம் எடுத்துரை
காலச் சுவடுகலே நீங்கள்
கல்லறை வாழ்திடும் போதிலும் உங்கள்
சொல்லுரை உலகினியே
நாளை விடிந்திடும் தேசம் என்று
காத்திடும் வீரர்களே
நல்ல செய்வரும் காத்தே நீங்கள்
பார்த்திடும் நாள்வருமே
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (26.09,2026)
