காலி துறைமுகத்திற்கு அருகில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த 27 பணியாளர்கள், வெளிவிவகார அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் இன்று பிற்பகல் காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக காலி மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அக்குழுவினர், இலங்கை கடற்படையின் இரண்டு டோரா படகுகள் மூலம் காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.
