தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். மாறாக நாடாளுமன்றத்தில் அது குறித்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாகவே அதைக் கருதுகின்றேன் எனவும் கூறியுள்ளார்.
