குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மேலும் பல சட்டமூலங்கள் தயாரிக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நச்சுக்கள், அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருட்கள் அவசரச் சட்டம் (திருத்தம்), புனர்வாழ்வு (திருத்தம்) , 2007, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான அவசரச் சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்பு சட்டம்ஆகியவை எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படும் சட்டமூலங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
