சட்டவிரோதமான T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடைமையில் வைத்திருந்த 75 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (27) பிங்வத்தை காவல் பிரிவுக்குட்பட்ட பாணந்துறை, காலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்து விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
