முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீஸ் மீண்டும் மேலதிக விசாரணைக்கு கிளிநொச்சி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை காவல்துறையினரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீஸிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்தது.
வழக்கில் இன்று (05) வரை வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் திகதியன்று வல்வெட்டித்துறை காவல்துறையினரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நேற்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் வழக்கின்; ஆதாரங்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் காலம் அவகாசம் காவல்துறையினால் கோரப்பட்டிருந்தது.
அவ்வகையில் இன்றைய தினம் வரை காவல்துறையினருக்கு உரிய எதிராளிக்கு எதிரான உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் காவல்துறையினால்; எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே சதீஸை உள்ளே தள்ள புதிய நகர்வாக கிளிநொச்சி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
