செம்மணி மனிதப் புதைகுழி 44 ஆம் நாள் அகழ்வு பணிகளின் போது புதிதாக 8 என்புக் கூடுகள் அடையாளம்; காணப்பட்டுள்ளது.அதேவேளை இதுவரை 489 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட 44 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நீதவான் நீதிமன்றக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிதாக 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியிருந்தது. அதற்கமைய, 44 ஆம் நாளான இன்றைய தின அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 என்புக் கூடுகள் சான்றுப் பொருட்களாக உத்தியோகபூர்வமாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்றைய தின அகழ்வுச் நடவடிக்கைகளின் போது புதிதாக மேலும் 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணச் செய்திகள்
செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இக் காலப்பகுதியில் மொத்தமாக 491 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 489 என்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
