டகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றைய தினம் 26வது ஆண்டு கடந்துள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண சிறீதர் திரையரங்க அலுவலகத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று பல மணிநேரம் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முறைப்படியான தேடுதல் அனுமதியைப் பெற்று சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் சிறீதர் திரையரங்க கட்சித் தலைமை அலுவலகத்திலேயே நீண்ட நேரம் தேடுதல் இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் நிர்வாகப் பொறுப்பாளர் ஆகியோரிடம் அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
எனினும் தனது அலுவலகத்தினில் ஒரு மயிரினை கூட இலங்கை காவல்துறை புலனாய்வு பிரிவினர் எடுத்திருக்கவில்லையென டக்ளஸ் தேவானந்தா ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
