வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சந்தித்துள்ளார்.
சந்தித்து வெளியே வந்து பேசிய தேரர் எதிர்காலத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமலுக்கு ஏற்படக்கூடும். அரசியல் நிலைமைகள் மாற்றமடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படலாம்.
நான் இன்று நாமல் ராஜபக்ஷவிடம் நலன் விசாரிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்தேன். இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.
சட்டம் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ள நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும் என தெரிவித்துள்ளார்.
