சுங்கத்திலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களை விடுவிப்பது தொடர்பான ஆவணங்களை வழங்குவதற்காக ரூ. 30,000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு சுங்கப் பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், இலங்கை சுங்கத் தலைமை அலுவலகத்தில் இன்று (12) பிற்பகல் சுமார் 2.25 மணியளவில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
