பியகம நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்புப் பணிகளால் வரும் சனிக்கிழமை (14-11-2026) காலை 8.30 முதல் இரவு 10.00 வரை 13.5 மணி நேரம் நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது. இதனால் கெலனியா, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்கூட்டியே நீரைச் சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
