வவுனியா வெளிவட்ட வீதியில் 12,320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உப காவல்துறை பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
