தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரின் பிறந்த மண்ணான யாழ். ஊரெழுவில் அமைந்துள்ள அவரது வீடு அமைந்திருந்த வளாகத்தில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் , குழு தாயக செயலணி போன்றனவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
