தெற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் அந்நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட உக்ரேனிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையோரப் பகுதியான கிராஸ்னோடர் கிராயில் உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு ஆலையே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
