தொடர்ச்சியாக 48 மணிநேரம் பெய்த கனமழையால் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நகரம் முழுவதும் வெள்ள அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாங்கொக்கின் 50 மாவட்டங்களும் அவசர நிலை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
