மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தின் உறுப்பினர் திரு.அமுதக்குமார் செல்வரட்ணம் அவர்கள் கனடா மொன்றியலில் 29 .09. 2026 இல் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இவர் திருமதி.கில்டா பத்மினி அமுதக்குமார் என்பவரின் அன்புக்கணவரும், பிரதீபன் அமுதக்குமார், சதீஸ் அமுதக்குமார் ஆகியோரின் பாசமிக்க தந்தையுமாவார். அவரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், செபத்தில் இணைகின்றோம். அவரின் ஆன்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றியை அடைய மன்றாடுகின்றோம்.
மீட்பின் அன்னை மறைத்தள பங்குத்தந்தையும், மக்களும்.
இறுதி சடங்கு:
கனடா மொன்றியலில் அமைந்துள்ள Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 இல் 11 .10. 2026 ஞாயிறு அன்று பார்வைக்கு மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை வைக்கப்படும், பின்னர் 13 .10. 2026 செவ்வாய் அன்று மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள ஆலயத்தில் (Our Lady of Deliverance Tamil Catholic Church, 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4 ) காலை 11.30 மணிக்கு அன்னாருக்கான இரங்கல் திருப்பலி நிகழ்த்தப்படும். அதை தொடர்ந்து Cimetière Notre Dame de l’Espérance, 1759 Rue Antoine-Dalmas, Laval, QC H7R 5Y4, என்ற சேமக்காலையில் அன்னாரின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்
