சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றிருந்த முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியுள்ளார். இந்நிலையிலும், சிரிலிய சவிய கணக்கு தொடர்பான நிதி முறைகேடு விசாரணைகளில் காவல்துறையினரால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
