படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிமலராஜனின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலையினை நிகழ்விற்கு விசேடமாக வருகை தந்திருந்த தெற்காசிய மகளிர் ஊடக கட்டமைப்பின் சிறப்பு பிரதிநிதிகள் இணைந்து அணிவித்திருந்தனர்மூத்த ஊடகவியலாளர் நடேசப்பிள்ளை வித்தியாதரன் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சக ஊடகவியலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், சுண்டிக்குளியில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் வைத்து நிமலராஜன் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டு 26 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இந்த படுகொலைக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என இதன்போது சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
