
அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீமெந்து கலவை லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட எட்டு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அத்துடன், இச்சம்பவத்தின் போது வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் அக்குறணைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்
