பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அந்நாட்டு உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். இதன்படி, பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகள் வசித்துவிட்டாலே தானாகவே நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, இனிமேல் அதனைப் பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
