2027 ஜனவரி வரை நீர் கட்டணங்களில் எதுவித மாற்றமும் இருக்காது என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நீர் கட்டணத் திருத்தங்கள் ஆண்டுக்கு இரு தடவைகள் மீளாய்வு செய்யப்படுவதாகவும் 2027 ஜனவரியில் அடுத்த மீளாய்வு செய்ய தி்ட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
