பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டல் அமைப்புகளில் சைபர் தாக்குதல் நடத்தி உணவுப் பொருட்களை வீணாக்கிய பின்னணியில் ஈரானின் IRGC சைபர் பிரிவு இருப்பதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பேர்க் போன்ற நாடுகளிலும் இத்தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மூன்று பேருக்கு சர்வதேச பிடியாணை கோரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
