பொலனறுவையில் உள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (செப்டம்பர் 26) அதிகாலை சுமார் 4:30 மணியளவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த பலர் பொலனறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
