சந்தையில் போலி களைநாசினிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதால் நெல் விளைச்சல் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் உரையாற்றும் போது சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்தி ஆய்வு செய்வதற்கான முறைமைசார் பொறிமுறை ஒன்றை அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
