யாழ்ப்பாணம் கோட்டை முகாம் விடுதலைப்புலிகள் வசம் வீழ்வதை தடுக்கும் வகையில் இலங்கை படைகளினால் தீவகப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு, மீண்டும் நவம்பர் 10 ஆம் நாளுக்குத் திகதியிடப்பட்டுள்ளது.
வழக்கு இன்று (22) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உலக வரைபடங்களை ஆராய்
அதன்போது, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் காவல்துறையினர் தமது சான்றுகளைச் சமர்ப்பித்ததுடன், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் கோரியிருந்தனர்.
கடந்த ஜூலை 28 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடம் தொடர்பான சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து திரட்டிச் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இருந்தும், மீண்டும் காவல்துறையினர்; இன்றைய தினமும் கால அவகாசம் கோரியிருந்தனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு மீண்டும் திகதியிடப்பட்டுள்ளது.
முன்பதாக, மண்டைதீவு சம்பவத்தில் தனது மகனை இழந்ததாகக் கூறப்படும் 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால், கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
