மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பிராந்தியப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி பதற்றத்தையே அதிகரித்துள்ளதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தெஹ்ரானில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவைச் சந்தித்த அவர், பிராந்திய அமைதியை உறுதிசெய்ய பேச்சுவார்த்தை மற்றும் கூட்டுப் பங்கேற்புக்கு ஈரான் தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
