யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் அமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அமர்வு இன்று (29-09-2026) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கீரிமலைப் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள் இதுவரை அகற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மொத்தம் 10 உறுப்பினர்கள் சபை அமர்வைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
