ஐபிசி தமிழ் கந்தையா பாஸ்தரனின் தயாரிப்பில் உருவாகி கடந்த 02 ஆம் திகதி வெளியாகிய போராட்டம் முழுநீள திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை உலகெங்கிலும் குவித்தது. தாம் எதிர்பார்த்ததை விடவும் இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக இருந்ததாக படத்தைப் பார்வையிட்ட அனைவருமே தெரிவித்திருந்தனர். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் இந்தப்படத்திற்கு பேராதரவு கிடைத்திருந்தது.
