“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என ஊழலினை அழிக்கப்போவதாக கூறி களமிறங்கிய தேசிய மக்கள் சக்தியின் வீட்டு திட்டத்தில் அரங்கேறிவரும் மோசடிகளையடுத்து திட்டம் பல பகுதிகளிலும் இடைநிறுத்தப்பட்டுவருகின்றது.
கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியினால் 50 இலட்சம் ரூபா வழங்கி முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்திற்கு 5 இலட்சம் வரை இலஞ்சம் கோரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வீட்டு திட்ட பயனாளிகளை தெரிவு செய்வதிலேயே தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் முதல் பிரமுகர்கள் வரை பண வசூலில் குதித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
வீட்டு திட்டத்தினில் பெயர்களை இணைத்துக்கொள்ளவே அத்தகைய இலஞ்சம் பெறப்படும் நிலையில் வீட்டு திட்ட நடவடிக்கைள் இடைநிறுத்தப்பட்டுவருகின்றது.
கடந்த ஆண்டினில் அரங்கேறிய டித்வா வெள்ளப்பாதிப்பு மற்றும் கடந்த காலங்களில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட பொதுமக்களிற்கே வீடுகள் அமைத்து வழங்கப்படுகின்றது.
இதனிடையே தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “வாழ்க்கைக்கான வலிமை” வீட்டுத்திட்டத்தின் பயனாளிகளுக்கான முதற்கட்டக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நகரங்களை ஆராய்க
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.
