ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் ரூமேஷ் பத்திரகே தங்கப் பதக்கம் வென்றார். இன்று (28) நடைபெற்ற குறித்த இப்போட்டியில், அவர் 88.55 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இந்தியாவின் யஷ்விர் சிங் 85.72 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், ரோஹித் யாதவ் 84.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
