அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதியில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த கேளிக்கை விடுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த நபர் ஒருவரால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
