அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டாரா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க நோர்வே நோபல் குழு மறுத்துள்ளது. நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ், வழங்கிய நேர்காணலில், பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் குறித்து குழு ஒருபோதும் கருத்துத் தெரிவிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
