தென்மேற்கு சீனாவின் திபெத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாகவும், 65 பேர் காயமடைந்ததாகவும் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
தொலைதூர இமயமலைப் பகுதியில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டறிய முழு அளவிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் உயிரிழப்புகளைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார் என சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கம் இது என்றும், ஜனவரி 2024-க்குப் பிறகு சீனாவைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்றும் சிசிடிவி தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
