அம்பாறை , கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மோட்டார் குண்டொன்றும், ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த இடத்தை அரச அபிவிருத்திப் பணியாளர்கள் அல்லது பொதுமக்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
