செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும் என மரியோ அருள்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். பெருமளவில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடங்களில் பணியாற்றிய சொந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கான சர்வதேசக் கூட்டமைப்பொன்றை கனடாவினால் உருவாக்கமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
