ஸ்பெயினின் டொலிடோ பகுதியில் இரு அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்ரிட்டிலிருந்து செவில்லே நோக்கி ஒரே திசையில் பயணித்த ரயில்களில், பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பின்பகுதியில் மற்றொரு ரயில் அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
