கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர், கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினரின் காவலில் இருந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த (25) நண்பகல் குறித்த நபரைப் பிரதேசவாசிகள் பிடித்து கொபெய்கனே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
