லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.
