ஈரான் விதித்துள்ள 7 நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தம் செய்த போதிலும் ஏழு நிபந்தனைகளையும் அமெரிக்கா முழுமையாக ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
