தெனியாய நீர்நிலையில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி ப*லி..
மாத்தறை – தெனியாய, கெலே தொல (Kele Dola) பகுதியில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் திடீரென ஏற்பட்ட நீரோட்டத்தில் சிக்கி பரிதாபமாக உ**யிரிழந்துள்ளனர்.
காணாமல் போன நால்வரின் சடலங்களும் பின்னர் கடற்படையினர் மற்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்கள் குழுவினர் சுற்றுலா சென்றிருந்தபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருமணமாகி 17 நாட்களே ஆன நிலையில் உ**யிரிழந்த இளைஞர்
உ**யிரிழந்தவர்களில் 34 வயதுடைய பிஷான் பிரபாத்வர என்பவரும் ஒருவர்.
களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த மாதம் 21ஆம் திகதியே திருமண வாழ்க்கையில் இணைந்திருந்தார்.
திருமணமாகி வெறும் 17 நாட்களிலேயே மரணம் அவரைப் பிரித்துச் சென்றுள்ளமை குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சியாகத் தொடங்கிய இல்லற வாழ்க்கை இவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்தமை நெஞ்சை உருக்கும் துயரமாகியுள்ளது.
![]()
உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள்
Weniger anzeigen
