இலங்கையர்களை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றிய சர்வதேச மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இந்தியாவின் தேசிய விசாரணை முகவரகத்தால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இன்டர்போல் சிவப்பு அறிக்கைக்கமைய இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
