ஓய்வு பெற்றுச் செல்லுகின்ற இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா அவர்களினால் தமிழ் பேசும் கட்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் பேசும் தரப்புகள் தமக்கிடையில் மாத்திரமன்றி, தென்னிலங்கை ஆட்சியளர்களுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா ஓய்வு பெற்றுச் செல்லுகின்ற போதும் புதிய தூதர் தொடர்பில் தகவல்கள் வெளிவந்திருக்கவில்லை!
