பொரளை, டி.எஸ். சேனாநாயக்க சந்தியை அண்டிய வீதிப் பகுதியொன்று இன்று (20) இரவு 10.00 மணி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வடிகால் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வழிந்தோடும் நிலையைச் சீர்செய்யும் திருத்தப் பணிகளுக்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
