ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடங்கியதில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் – ரஷ்யா இடையே, 2022 பெப்ரவரியில் போர் தொடங்கியது. இரு தரப்பிடையேயான போர் நிறுத்தத்துக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் நான்கரை ஆண்டுகளைக் கடந்து போர் தொடர்கிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
