யாழ்தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் இன்றையதினம் (27/11) அஞ்சலி செலுத்திப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து பொது ஈகைச்சுடர் 03 பெண் மாவீரர்களின் தாயார் இராசரத்தினம் புஸ்பராணி அவர்களால் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் பெற்றோர் உரித்துடையோரால் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதேவேளை கடலில் காவியமானோர் நினைவாகவும் சம நேரத்தில் ஈகைச்சுடர் கடற்கரும்புலி மாவீரரின் தாயார் யேசுராசா அருளம்மா அவர்களால் ஏற்றப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்
தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது
நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது, இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
புவியியல் காண்
