மாவீரர் நினைவேந்தல் நாளை முன்னிட்டு, உயிர்நீத்தவர்களையும் அவர்களது குடும்பங்களையும் நினைவுகூர்ந்த உலகத் தமிழர் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் அபிலாசைகள் மற்றும் தாயகத்தின் மேம்பாடு குறித்து வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களின் தேசிய அடையாளம், தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமைகளை ஜனநாயக வழியில் நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் எனக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
