என்ற பட்டத்தை 28.03.2026 அன்று
தனது 10 ஆவது ஆண்டு கலைநிகழ்வில்
STS தமிழ் TV இயக்குநர் தேவராஜ் அண்ணா எனது கைகளில் கொடுத்தார்.
அவருக்கு எனது நன்றி![]()
பத்து ஆண்டுகள், என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு போராட்டம்,
ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு உறுதிப்பாடு,
ஒவ்வொரு நேர்காணலும் ஒரு நம்பிக்கை,
புலம்பெயர் தேசங்களில் எமது கலை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்துப் பத்தாண்டுகளாக வெற்றிகரமாகப் பயணிக்கும் STS தமிழ் தொலைக்காட்சிக்கு எங்கள் வாழ்த்துகள்.![]()
உறுதியான உழைப்பில் உயர்ந்து நிற்கும் STS தமிழ் TV யின் “கலைவித்தகி”
என்னும் விருதினைப் பெற்றதில் பெருமையும் மகிழ்ச்சியும்.
விருதுகள் நாம் எல்லாவற்றையும் முடித்துவிட்டதற்காகவும் சாதித்தற்காகவும்
வருவதில்லை. நாம் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டல், ஒரு ஊண்டுதல். அவ்வளவு தான்.
கைகளில் ஒரு விருதைத் தாங்கும்
போதிலிருந்துத் தான் உண்மையான பொறுப்புத் தொடங்குகிறது,
என்பதை நாம் உணர வேண்டும்.
நான் வாழும் சமூகம் என் கலையை அடையாளம் கண்டுக் கொண்டது, அங்கீகரித்தது என்பது,
என்னைத் தூக்கி வைக்கக் கூடாது.
நிலத்தில் உறுதியாக நிற்க
வைக்க வேண்டும்!
இனித்தான் இன்னும் அதிகமாக
வேலைச் செய்ய வைக்க வேண்டும்!
அது தான் நாம் அந்த விருதுக்கு கொடுக்கும் மரியாதை.
என்னுடன் சேர்ந்து விருதுகளைப்
பெற்றச் சகக் கலைஞர்களுக்கும்
எனது பாராட்டுகள். எனதுக் கணவருக்கும்
“ஒளிக்கலைவித்தகர்” என்றக் கெளரவிப்பு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
STS தமிழ் TV-க்கு எங்கள் நன்றி. ![]()
மென்மேலும் வளரட்டும்
உங்கள் தமிழ் சேவை !
என்றென்றும் நட்புடன்